Wednesday, June 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/687998.jpgபோதிய இருப்பு இல்லாததால் மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்: சாலை மறியலுக்கு முயன்றவர்களை சமாதானப்படுத்திய போலீஸார்

மதுரை இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை, இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.

மதுரையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. நகரில் அரசு மருத்துவமனை சார்பில், அருகிலுள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நகர் நல சுகாதார மையங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிற இடங்களைவிட இளங்கோ மேல்நிலைப்பள்ளி முகாமில் தினமும் ஏராளமானோர் தடுப்பூசி போடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்