Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687363.jpgதேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சத்தில் உபகரணங்களை வழங்கிய கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, கோவையில் உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வழங்கினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், காந்திபார்க் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு பொதுமக்கள் பயன்படுத்திவரும் உடற்பயிற்சி கூடத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கித் தர வேண்டும் என உடற்பயிற்சி செய்வோர் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கமல்ஹாசன் உறுதியளித்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், அந்த உடற் பயிற்சி கூடத்துக்கு உபகரணங்களை கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்