Tuesday, June 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687637.jpgதாம்பரம் அருகே செம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை

தாம்பரம் அருகே செம்பாக்கம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.இந்த ஏரியில் விஷம் கலக்கப்பட்டதா? என மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தில் பெரிய ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதந்தது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்