Tuesday, June 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687631.jpgகிராமப்புற தொழில் முனைவோர் கடனுதவி திட்டத்தில் 656 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி கடன்: ஊரக தொழில் துறை அமைச்சர் வழங்கினார்

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் கடன் உதவி திட்டத்தில் 656 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான கடனுதவிகளை, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் கடன் உதவி மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்