Thursday, July 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/30/large/698830.jpgநித்திய கல்யாண பெருமாள் கோயிலில் திருமண மண்டபம்; கந்தசுவாமி கோயிலில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணி: அறநிலையத் துறை அமைச்சர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு, பல்வேறுபணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இதில், ஈசிஆர் சாலையையொட்டி உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பக்தர்களின் வசதிக்காக திருமண மண்டபம் அமைப்பது, வாகன நிறுத்துமிடம், நந்தவனம் அமைப்பது குறித்துஅறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், திருத்தேருக்கு நிழற்குடை மற்றும் கல்யாண குளத்தை சுற்றிலும் அழகு பூச்செடி அமைக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்