Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688818.jpgகரோனா 2-வது அலையில் 400 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கிய சென்னை தன்னார்வலர் குழு

தமிழகத்தில் கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது, சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காத்திருந்த 400 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி சென்னை தன்னார்வலர் குழு உதவி செய்துள்ளது.

இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் கூறியதாவது: கடந்த மே மாதத்தில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. பல மருத்துவமனைகளில படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். அப்போது, சமூக நல்லிணக்க அறக்கட்டளை, காக்கை, சுமைதாங்கி அறக்கட்டளைகள் இணைந்து, மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் சேவையைத் தொடங்கினோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்