Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699305.jpgகேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வாளையாறு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் சுணக்கம்: தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் கருத்து

தமிழக - கேரள எல்லையான, வாளையாறு சோதனைச்சாவடியில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், அதனால் தொற்று பரவும் வாய்ப்புஉள்ளதாகவும் சமூக செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடி வழியாக தினமும் ஏராளமானோர் கோவைக்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, அரசின் உத்தரவைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு வாளையாறு சோதனைச்சாவடி பகுதியில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. வாளையாறு சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர், அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் உடல்வெப்ப நிலை, இ-பதிவு ஆகியவற்றை பரிசோதித்து, அவர்களுக்குகாய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா எனக் கேட்டறிந்து வந்தனர். தமிழகத்தில் இரண்டாம் அலை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது கோவையில் தினமும் சராசரியாக 150 முதல் 180 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், கரோனாதொற்று பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளது. தினமும் அங்கு தொற்று உறுதி செய்யப்படுபவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும்முக்கிய வழித்தடமான வாளையாறில் கண்காணிப்புப் பணி முழுமை யாக மேற்கொள்ளப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்