Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699328.jpgமேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வரை கண்டித்து தஞ்சையில் பாஜக ஆக.5-ல் போராட்டம்: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து ஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்