Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699723.jpgவேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவு: பாதுகாப்பு ஆணையர் விரைவில் ஆய்வு

வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே ரயில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தடத்தில் பாதுகாப்பு ஆணையர் குழுவினர் விரைவில் ஆய்வு நடத்தஉள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதையடுத்து, வேளச்சேரியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தூண்களும் அமைக்கப்பட்டன. வேளச்சேரியை அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. தற்போது ஆதம்பாக்கம் வரையில் ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்