Friday, July 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/31/large/699219.jpgகட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்து வெளியிடும் காங்கிரஸார் மீது கடும் நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடும் காங்கிரஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்