Saturday, July 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/01/large/699789.jpgஉலகத் தரம் மிக்க புலிகள் காப்பகமாக ஆனைமலை, முதுமலை காப்பகங்களுக்கு அங்கீகாரம்

கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் நீலகிரி முதுமலை புலிகள்காப்பகங்களை உலகத் தரமிக்கபுலிகள் காப்பகமாக அங்கீகரித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தியாவில் 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் உலக அளவிலான புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்துதல் ஆய்வினை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2020-ம் ஆண்டு செயல்படுத்தியது. அதில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாடு ஆகியன கணக்கிடப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்