Monday, August 30, 2021

https://ift.tt/3jukIrJ மாதங்களில் 2,398 பேர் டெங்குவால் பாதிப்பு

தமிழகத்தில் 8 மாதங்களில் 2,398 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சலும்பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் 2,398 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த ஆண்டில் 74 பேர் சிக்குன்குனியா, 380பேர் மலேரியா, 254 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல், 835 பேர் ஸ்கரப் டைபஸ்எனப்படும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்