Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710430.jpgதென்மேற்கு பருவமழை தீவிரம்: தென்காசி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. பெரும்பாலான நாட்களில் வறண்ட வானிலை நிலவியதுடன், வெப்பமும் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் இறுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்