Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710529.jpgவேலை செய்யுமிடத்தில் பாலியல் சீண்டல்; 3 ஆண்டுகளில் 42 பெண்கள் புகார்: தனியாரில் பணிபுரிவோர் தயக்கம்

வேலை செய்யும் இடங்க ளில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் அதற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்புக்கு உதவ கடந்த 2018-ல் மாவட்ட உள்ளூர் புகார் குழு உருவானது. பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் புகார் அளித்தால் இக்குழு விசாரணை நடத்தும். குற்றச்சாட்டு நிரூபணமானால் விதிக்கப்பட வேண்டிய தண்ட னையை ஆட்சியருக்கு இக்குழு பரிந்துரைக்கிறது. இக்குழுவுக்கு தலைவராக வித்யா ராம்குமாரும் உறுப்பினர்களாக 5 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக உள்ளூர் புகார் குழுவிடம் விசாரித்தபோது, “உள்ளூர் புகார் குழு அமைந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. இக்காலத்தில் நேரடியாக 42 புகார்கள் பெறப்பட்டன. குறிப்பாக பாலியல் விமர்சனங்கள், ஆபாச படங்களை காட்டுவது, பாலியல் சைகைகள், தொடுதல்கள் என பல வகைகளில் புகார்கள் இடம்பெற்றன. அதேபோல் பெண்க ளுக்கு வேலையில் பிரச்சினை ஏற்படுத்தி அச்சுறுத்துவது, வேலையில் தேவையின்றி குறுக் கீடு செய்வது, தேவையின்றி சகஊழியர் முன்னிலையில் அவமா னப்படுத்துவது போன்றவையும் பாலியல் துன்புறுத்தல்கள் தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்