Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711241.jpgசிறை கண்காணிப்பாளரை மிரட்டியதாக புகார்: சிறையில் உள்ள தீவிரவாதியிடம் போலீஸார் விசாரணை

சிறை கண்காணிப்பாளரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள தீவிரவாதி காஜா மொய்தீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து ஆட்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) கைது செய்தனர். சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் காஜா மொய்தீனுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்