Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721437.jpgதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம்: ரூ.2.60 கோடி வருவாய் அரசு கணக்கில் சேர்ப்பு

தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட்டு, அதில்கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்