Thursday, September 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721780.jpgபோலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை; 10 பேருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

போலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சியை அடுத்த ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் சுப்பன் என்ற பாலசுப்பிரமணியன் (60). விவசாயியான இவர், கடந்த 2013 ஜூன் 27-ம் தேதி பெரிய கொத்தமங்கலம் பகுதியில் உள்ள பொதுக் குளத்தின் கரையில் நண்பர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கள்ளிக்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஆறுமுகம் என்பவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்