Sunday, November 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/741882.jpgசெங்கை மாவட்டத்தில் மழையோ மழை: தீவுகளாய் மாறி தத்தளிக்கும் குடியிருப்புகள்

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி குடியிருப்புகள் தீவுகளாக காட்சிஅளிக்கின்றன. மழை தொடரும் என்பதால் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் உள்ள பாலாறு, அடையாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகளில் உபரிநீர் நேரடியாக ஆறுகளுக்கு செல்ல வழியின்றி, பல குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக காட்சி அளிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்