Tuesday, November 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742425.jpgபல ஆண்டுகளாக நீடிக்கும் மழைக்கால அவலங்கள்; தூத்துக்குடி மாநகரின் பிரதான பிரச்சினைக்கு தீர்வு எப்போது? - 7 நாட்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாக மக்கள் வேதனை

தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் திண்டாடும் நிலை தொடர்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 நாட்கள் மழை பெய்தபோது, குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.

ஆனால், கடந்த 25-ம் தேதி கொட்டிய கனமழையால் தூத்துக்குடி மாநகரத்தின் நிலை படுமோசமாகியது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதன்பின் நான்கு நாட்கள் பெரிய அளவில் மழை இல்லை. அவ்வப்போது லேசான சாரல் மட்டுமே பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்தின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்