Monday, November 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742253.jpgகுலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், “நீலகிரி மாவட்டம், நெடுக்காடு எனும் கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வக் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் பூஜை உள்ளிட்ட விழாக்களை படுகர் இன மக்களே செய்து வருகின்றனர். அந்த கோயிலில் அதே கிராமத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்துவந்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்