Monday, November 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742285.jpgஅமைச்சர் செந்தில் பாலாஜி - ஜோதிமணி எம்பி இடையேயான நட்பில் விரிசல்: வெட்டவெளிச்சமாக்கிய உள்ளிருப்புப் போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்ட எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்புப் போராட்டத்தால், அவருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே இருந்து வந்த ஈகோ மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது அமைச்சராக உள்ளசெந்தில்பாலாஜி, 2018 டிசம்பரில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், இந்தத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்