Monday, November 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742217.jpgதமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதி

தமிழக நீதிமன்றங்களில் தமிழைவழக்காடு மொழியாக கொண்டுவருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்என்று சட்டத் துறை அமைச்சர்எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில், தமிழக சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 506 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்