Friday, March 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/26/large/781769.jpgபொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

சென்னை: பொது இடத்தை கடவுளே ஆக்கிர மித்திருந்தாலும் அதையும் அகற்றஉத்தரவிடப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்டபலபட்டரை மாரியம்மன் கோயில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெறுகிறது. இது தங்களது இடத்துக்குச் செல்லும் பாதையை மறைக்கும் வகையில் உள்ளதால், கட்டுமானத்துக்குத் தடை விதிக்க வேண்டும்என்று நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பாயி தொடர்ந்த வழக்கில் மாவட்ட முதன்மை முன்சீப் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்