Wednesday, March 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/24/large/780982.jpgகதர் வாரியத்தில் பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை: கைத்தறித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: கதர் வாரியம் தயாரித்துள்ள புதிய பொருட்கள் விற்பனை மற்றும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் ஆகியவற்றை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ‘காதி பராம்பரியம்’ என்றபெயரில் தூயமல்லி, கருப்பு கவுனி, பூங்கார், சீரக சம்பா,மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி மற்றும் பூங்கார் அரிசி வகைகளையும், ‘காதி நியூ லைப்’ என்றபெயரில் கடலெண்ணெய், நல்லெண்ணெய், ‘காதி ஃபிரஷ்’ என்ற பெயரில் நறுமணங்களைக் கொண்ட அகர்பத்திகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் வகைகளை தயாரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்