Saturday, March 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781976.jpgபெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை பாஜக ஆட்சி உறுதி செய்துள்ளது: தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பெருமிதம்

பாஜகவைச் சேர்ந்த அனைத்து மாநிலங்க ளின் மகளிரணி தலைவிகளும், தேசிய மகளிரணி நிர்வாகிகளும் கலந்துகொண்ட கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. தேசியமகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி தலைவிஜெயலட்சுமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தேசிய மகளிரணி பொறுப்பாளர் குல் சாந்தகுமார் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாநில மகளி ரணி தலைவிகளும், பொறுப்பாளர்களும், தேசிய மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்