Tuesday, March 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/30/large/783045.jpgடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட புதிய நடைமுறை அறிமுகம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடபுதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நீங்கலாக, இதர அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்