Thursday, March 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781372.jpgசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக என்.மாலா, எஸ்.சவுந்தரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதிகளாக, என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்துக்கு அரசு மற்றும் அரசு சாராத வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர்மோகன், கே.குமரேஷ்பாபு, அப்துல் ஹமீத், ஆர்.ஜான்சத்யன்ஆகிய 6 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்தமாதம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்