Thursday, March 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783787.jpgபிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி கோரினார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டிட திறப்பு விழா ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் முதல்வர் நேற்று பிற்பகல் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்