Wednesday, March 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/17/large/778369.jpgபண்ணாரி கோயிலில் நிலக்கம்பம் சாட்டு நிகழ்வு: கம்ப ஆட்டம் ஆடி பக்தர்கள் வழிபாடு

ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நிலக்கம்பம் சாட்டப்பட்டதையடுத்து, மேளதாளம் முழங்க பக்தர்கள் கம்ப ஆட்டம் ஆடி அம்மனை வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 22-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கடந்த 7-ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் திருவீதி உலா கடந்த 9-ம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்தது. அம்மன் சப்பரம் கோயிலுக்கு வந்த நிலையில், நேற்று அதிகாலை, கோயில் முன்பாக நிலக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்