Saturday, March 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781847.jpgகாட்பாடியில் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதியில் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி அளித்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்