Friday, April 29, 2022

https://ift.tt/nQNEJi8 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதி தேர்வு கட்டாயம்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்

சென்னை: ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கட்டாயம் நடைபெறும். சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டதால், இந்த கல்வி ஆண்டில் (2021-22) ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 40 முதல்50 சதவீதம் வரை பாடத் திட்டம் குறைக்கப்பட்டது. மேலும், இதன்அடிப்படையிலேயே ஆண்டு இறுதிதேர்வு மே மாதம் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்