Sunday, April 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/04/large/784671.jpgஅரும்பாக்கம் கூவம் கரையோரம் வசித்த 450 குடும்பங்கள் மறுகுடியமர்வு பணி தொடக்கம்

சென்னை: சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 450 குடும்பங்களை மறுகுடியமர்த்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டன.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து, கூவம் ஆற்றின் கரையோரம் 44 அமைவிடங்களில் வசித்து வந்த 14,257 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அப்பணி சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்