Tuesday, April 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/06/large/785370.jpgதமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயராது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். மின்சார வாகனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் சில பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் சோதனை முறையில் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளிலும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில்நவீன தொழில்நுட்பத்துடன் கூடியகேமராக்கள் பொருத்தப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்