Wednesday, April 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793185.jpgஅயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவு: அறநிலையத் துறை, தனி நீதிபதி உத்தரவுகள் ரத்து

சென்னை: அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ‘ஸ்ரீராம் சமாஜ்’ அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்த மண்டபத்தை கையகப்படுத்தி அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு மற்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம் சமாஜ்’ என்ற அமைப்பின் சார்பில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு சுவாமி சிலைகள் வைத்து பூஜிக்கப்படுவதாகவும், பக்தர்களிடம் காணிக்கை பெறுவதாகவும், நிதி வசூலில் முறைகேடுகள் செய்வதாகவும் கூறி, இம்மண்டபத்தை அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தக்காரை நியமித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்