Monday, May 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807576.jpgமதுரை கலெக்டர் ஆபீஸை சூழ்ந்த சாக்கடை கழிவுநீர் -  மனு அளிக்க வந்த மக்கள் அதிருப்தி

மதுரை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தால் இன்று சாக்கடை உடைந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தை கழிவுநீர் சூழ்ந்து தேங்கியது. அதனால், மனு அளிக்க வந்த மக்கள் சாக்கடை நீரை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணியாற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தூய்மைப்பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆட்சியர் அலுவலகத்தை கழிவு நீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மழை பெய்து அந்த தண்ணீரும் கழிவு நீருடன் சேர்ந்தால் குளம்போல் தேங்கி நின்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்