Tuesday, June 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/22/large/817007.jpgமுதல்வர் தலைமையில் ஜூன் 27-ல் அமைச்சரவை கூட்டம் - ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து முக்கிய முடிவு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்கள் மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. தொழில் தொடங்க வருவோருக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குதல், பல்வேறு சலுகைகள் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் அதில் அடங்கும். இதுதவிர, வெளிநாடுகளுக்கு சென்று புதிய முதலீடுகளை ஈர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்