Saturday, June 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/26/large/818586.jpgஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்த இபிஎஸ் தீவிரம் - கூட்டத்தை தடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 11-ம் தேதி நடத்துவதற்கான பணிகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. அப்போது முதல் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்தது. இரட்டை தலைமைதான் வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை என்பதில் இபிஎஸ் தரப்பும் உறுதியாக உள்ளன. எம்ஜிஆர் காலத்து மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோரின் சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்