Monday, July 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/19/large/828528.jpgகடந்த 50 ஆண்டு காலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ - ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடந்த 50 ஆண்டு காலத்தில் ‘தெற்கு சிறக்கிறது’ என்று அனைவரும் வியந்து பார்க்கும் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ‘தமிழ்நாடு திருநாள்’ விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவுக்குத் தலைமை தாங்கினார். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்புரையாற்றினார். ‘தமிழ்நாடு நாள்’ சிறப்பு மலரை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்