Monday, August 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/02/large/834372.jpgகாஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது சென்னையின் 2-வது விமான நிலையம் - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானதாகும். இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இடநெருக்கடியை சமாளிக்க, சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் (Green Field) அமைப்பதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியது. இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், படாளம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்தது. அதில், பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்