Friday, August 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/20/large/843974.jpgகோகுலாஷ்டமி பண்டிகைக்கு வீடுகளில் படையலிட்டு மக்கள் வழிபாடு: ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜை

சென்னை: கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தியை பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், வீடுகளில் படையலிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். நேற்று பகல் முழுவதும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்