Monday, August 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/02/large/834258.jpgஇரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏ.சி வெடித்த விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

சென்னை: ஏ.சி வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி புது மாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். திரு.வி.க. நகர், மணவாளன் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர்.இவரது மகன் ஷியாம்(27). இவர் அப்பகுதியில் ஆவின் உள்ளிட்ட பாக்கெட் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். ஷியாமுக்கு, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்ததனலட்சுமி(24) என்ற பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி, அவரது தாய் வீட்டுக்குச்சென்றுவிட்டார். இந்நிலையில்ஷியாம் நேற்று முன்தினம் இரவுதனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த அறையின் இருந்த ஏ.சி. திடீரென வெடித்து, அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்