Sunday, August 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/22/large/846680.jpgபொருளாதார நெருக்கடியால் பாதிப்பு: இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் (36), அவரது மனைவி டெல்சித்ரா (36), மகன் வெனுஷன் (7), இரண்டு மாதகுழந்தை பிரவீன்ஷா. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் (30), அவரது மனைவி சாந்தி (30), குழந்தைகள் தீபிகா (9), சசிகலா (4) ஆகிய 8 பேரும் தலைமன்னாரில் இருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாவது தீடையில் நேற்று முன்தினம் மாலை வந்திறங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்