Wednesday, August 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/25/large/850526.jpgவிஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவே நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்து வருகிறோம் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம்

சென்னை: மக்களை சந்திக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவே, அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருகிறோம் என அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர். எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை பிரேமலதா வழங்கினார். அதேபோல 70 ஆட்டோ ஓட்டுநர்கள், 70 மூத்த மன்ற நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்