Thursday, September 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875903.jpgமக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு - மதுரை அதிமுக பொதுக் கூட்டத்தில் இபிஎஸ்

மதுரை: ‘‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’’ என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுகவின் அனைத்து அணி சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்