Thursday, September 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/30/large/876211.jpgஎழும்பூரில் அக். 2-ம் தேதி வரை ‘தேசி மேளா’ - கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி

சென்னை: தனித்துவமான கலை, கைவினை, ஜவுளி,நகை, ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 'தேசி மேளா' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை நடத்திவரும் கிராவிட்டி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் 'தேசி மேளா' கடந்த செப். 23-ம் தேதி முதல் நடைபெறுகிறது. வரும் அக்.2-ம் தேதி வரை கண்காட்சியைக் கண்டு தேவையான பொருட்களை வாங்கமுடியும். இங்கு 100 ஸ்டால்களில் வசீகரிக்கும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், மயக்கும் நகைகள், நம்ப முடியாத ஓவியங்கள், பித்தளையால் ஆன சிலைகள், ஃபர்னிச்சர்கள் விற்பனைக்கு உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்