Thursday, September 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/23/large/872186.jpgராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கட்டிடக் கலைநுட்ப, கட்டமைப்பு கலைநுட்ப விருதுகள்

சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விருதுகளை வழங்கவுள்ளது.

கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக்கலை நுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலை நுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு கடந்தவாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது. ஒரு வாரத்துக்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்