Thursday, October 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888613.jpgநந்தனம் | ரூ.320 கோடி செலவில் 12 மாடிகளுடன் மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டிடம்: ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திறந்து வைத்தனர்

சென்னை: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பு பணிகள் முடிந்து, 54.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 173 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள்சென்னை பெருநகரில் இன்னும் சிலஆண்டுகளில் இயக்கப்படவுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் கோயம்பேட்டில் செயல்படுகிறது. கோயம்பேடு பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் மெட்ரோ ரயில் இயக்கத்தையும், நிர்வாகப் பணிகளையும் மெட்ரோ ரயில் நிறுவனம் நிர்வகிக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தலைமையகக் கட்டிடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி, அண்ணாசாலையில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 8.96 ஏக்கர் நிலத்தில் ரூ.320 கோடி செலவில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடம் கட்டும் பணி சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிந்து, 'சிஎம்ஆர்எல் பவன்' என்ற பெயரில் கட்டிடம் தயாரானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்