Saturday, October 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886759.jpgநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இன்று விலகுகிறது - வடகிழக்கு பருவமழை அக்.26-ல் தொடங்க வாய்ப்பு

சென்னை: நாடு முழுவதும் அனைத்து பகுதிகளில் இருந்தும் 23-ம் தேதிக்குள் தென்மேற்குப் பருவமழை விலகுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை விலகியதுமே தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு 23-ம் தேதி தென்மேற்கு பருவமழை விலகினாலும், தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்று வீசும் திசை மாறியுள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்