
சென்னை: "கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல். கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " தீபாவளிக்கு முன்தினம் அக்.23, கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நிகழ்ந்ததாக செய்தி வந்தது. பின்னர், அந்தக் காரிலிருந்த சிலிண்டர் வெடித்துள்ளது என்று செய்தி வந்தது. அதன்பிறகு தமிழக காவல்துறை டிஜிபி, ஏடிஜிபி போன்றோர் விரைந்து கோவை சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்