Tuesday, October 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/19/large/885108.jpgசென்னையில் பழுதடைந்த கழிவுநீர் குழாய்களை அகற்ற திட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னை: சென்னையில் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு 50, 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பழுதடைந்த குழாய்களை மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசும்போது, ‘‘பாதாள சாக்கடை பணி செய்யும்போதே குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும் சேர்த்தே செய்யலாம். இதனால் அரசு பணம் வீணாவது தடுக்கப்படும்’’ என்றார்.

வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது, ‘‘மழை பெய்யும்போது கழிவுநீர் குழாயில் தண்ணீர்அதிகமாக வந்து சாலையில் வழிகிறது. எனவே, தற்போது மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பதுபோல் கழிவுநீர் குழாய்களையும் சீரமைக்க வேண்டும். மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படும்போது கழிவுநீ்ர் குழாய்கள் உடைக்கப்படுகின்றன’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்